மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Missing
Dhushanthini K
1 year ago

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிந்தகல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் நேற்று (03.02) நீராடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிஸாரும் கடற்படையின் உயிர்காப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.



