இலங்கையின் தலைவர்கள் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!
#SriLanka
#Sajith Premadasa
#Ranil wickremesinghe
#Independence
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இலங்கையின் தற்போதைய பாதை முழு உலகத்தின் முன் நிரூபணமாகியுள்ளதால், இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதற்கு சுதந்திர தினத்தன்று தீர்மானம் எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள அனுப்பியுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் செழிப்பை மீண்டும் பெற. உணவுப் பாதுகாப்பு, கிராமிய மறுமலர்ச்சி மற்றும் உற்பத்திப் பொருளாதாரம் போன்ற பல நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நாம் கடினமான எல்லைகளைக் கடந்து வருகிறோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணிப்பது சகல பிரஜைகளின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.



