சாந்தனை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பான நடவடிக்கைக்கு பணிப்புரை விடுத்துள்ள ரணில்!

#India #SriLanka #Tamil Nadu #Ranil wickremesinghe #sritharan
PriyaRam
1 year ago
சாந்தனை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பான நடவடிக்கைக்கு பணிப்புரை விடுத்துள்ள ரணில்!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு இன்று சனிக்கிழமை நண்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர், நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

images/content-image/1706962353.jpg

இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரட்நாயக்கவுக்கு, சந்திப்பின் போதே ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதம் மற்றும் மேலதிக தகவல்களை தருமாறும் ஜனாதிபதி சிறீதரன் எம்.பியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!