10 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
#SriLanka
#Arrest
#Badulla
#drugs
#search
#tablets
Prasu
1 year ago

எந்தேரமுல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அப்புகேவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பில் ஒரு தொகை ப்ரீகெப் (PREGAB) போதை மாத்திரைகளுடன் நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 192,000 ப்ரீகெப் (PREGAB) 150 mg ரக போதைப் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பதுளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக எந்தேரமுல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.



