நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது: சந்திரிக்கா காட்டம்

#SriLanka #Sri Lanka President #Chandrika Kumaratunga #Social Media
Mayoorikka
1 year ago
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது: சந்திரிக்கா காட்டம்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் ,ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கின்ற எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை இந்த சட்டமூலங்கள் அரசாங்கத்திற்கு வழங்குகின்றன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. நாடாளுமன்றத்தினால் காணப்படுகின்றஇரண்டு சட்டங்கள் குறித்து நாட்டில் பெரும் கரிசனைகள் காணப்படுகின்றன – முதலாவது நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மற்றையது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார் என நான் நினைக்கின்றேன்.

 இந்த சட்டமூலங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதால் கலந்துரையாடப்பட்டுள்ளதால் போராட்டங்கள் வீதிகளில் இடம்பெற்றுள்ளதால் இந்த சட்டங்கள் குறித்து நான் தெளிவுபடுத்தப்போவதில்லை .

 ஒரு சிரேஸ்ட பிரஜை என்ற அடிப்படையில் எனது கருத்து என்னவென்றால் இரண்டும் மிகவும் பாரதூரமானவை ஆபத்தானவை. இவை மிகவும் ஆபத்தான விதத்தில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றன.

 இந்த சட்டங்கள் ஜனநாயக வழியில் செயற்படும் மக்களை துன்புறுத்துவதற்கான தேவைக்கு அதிகமான அதிகாரங்களை அரசாங்கத்திற்கு வழங்குகின்றன,ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கின்ற எதிர்ப்பு தெரிவிக்கின்ற மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை இந்த சட்டமூலங்கள் அரசாங்கத்திற்கு வழங்குகின்றன.

 இந்த சட்டங்களை விலக்கிக்கொள்ளுங்கள் என அரசாங்கத்திற்கு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!