கரையோரப் பாதை ரயில் நிலையங்களில் புகையிரதத்தை நிறுத்தாமல் பயணிக்க நடவடிக்கை!

#SriLanka #Railway #Train #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கரையோரப் பாதை ரயில் நிலையங்களில் புகையிரதத்தை நிறுத்தாமல் பயணிக்க நடவடிக்கை!

கரையோரப் பாதையில் இயங்கும் புகையிரதங்களை சிறு புகையிரத நிலையங்களில் நிறுத்தாது, பிராதான புகையிரதங்களில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி  கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி புகையிரத நிலையங்களில் காலை 05.00 மணி முதல் காலை 09.00 மணி வரை புகையிரதங்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

76 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை நாளை கொழும்பு காலி முகத்துவார சதுக்கத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் வெகு விமரிசையாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  

சுதந்திர விழாவில் பங்கேற்கும் முக்கியஸ்தர்கள் மற்றும் அணிவகுப்பில் பங்கேற்கும் முப்படையினர் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த ரயில் நிறுத்தப்படாமல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!