ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுபட்ட ரொபர்ட் பயஸ் தொடர் உணவுதவிர்ப்பு போராட்டத்தில்!

#India #SriLanka #Tamil Nadu #M. K. Stalin #Protest
PriyaRam
1 year ago
ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுபட்ட ரொபர்ட் பயஸ் தொடர் உணவுதவிர்ப்பு போராட்டத்தில்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரொபா்ட் பயஸ் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை பெற்ற ராபர்ட் பயஸ் கடந்த புதன்கிழமை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

தான் உட்பட சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகியோரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கக் கோரி ரொபா்ட் பயஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆன போதும் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

images/content-image/1706875563.jpg

முகாமில் தனது உரிமைகளுக்கோ, உணர்வுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரொபா்ட் பயஸ் மனு அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, 

"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோம்.

சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. சிறப்பு முகாம் எனப்படும் மற்றொரு சிறையில் தான் அடைத்தார்கள். திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம்.

சிறப்பு முகாம் எனப்படுவது சிறையை விட கொடுமையானதாக இருக்கிறது. மேலும் இங்கு நடை பயிற்சி செய்வதற்கோ நண்பர்களை பார்ப்பதற்கோ முடியவில்லை. சிறைவாசிகளோடு பழகுவதற்கு கூட எந்தவித அனுமதியும் வழங்கப்படுவதில்லை. 

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்கள் ஆரம்பத்தில் அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பலவித நோய்களுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் எனது உடல் நலத்தை பேணுவதற்கு நடை பயிற்சி செய்ய அனுமதி கேட்டும் இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

இதனால் எனது உடலில் பல நோய்த் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த மாதம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த போது ரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரகக் கல், மூட்டு வலி, இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

அதனால் கடந்த 22.1.2024 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு நடை பயிற்சி செய்யவும், விளையாடவும் அனுமதி கேட்டு கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!