இலங்கை நிதித்துறைக்கு உலக வங்கியிடமிருந்து கிடைக்கவுள்ள கடனுதவி!

#SriLanka #government #World Bank
PriyaRam
1 year ago
இலங்கை நிதித்துறைக்கு உலக வங்கியிடமிருந்து கிடைக்கவுள்ள கடனுதவி!

நிதித்துறை பாதுகாப்பு வலையை வலுப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியளிப்பதற்காக உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தில் கவனம் செலுத்தி, இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பு வலையின் நிதி மற்றும் நிறுவனத் திறனை வலுப்படுத்த இந்தத் தொகை வழங்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

images/content-image/1706868235.jpg

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் நிதித்துறைக்கு ஆதரவளிப்பதற்கு வலுவான பாதுகாப்பு வலைகள் தேவைப்படுவதாகவும், பொருளாதாரத்திற்கு நிலையான மற்றும் நம்பகமான வங்கித்துறை அவசியமானது என்றும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!