பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? மஹிந்த பசிலுடன் கலந்துரையாடுவாரா ரணில்?

#SriLanka #Mahinda Rajapaksa #Basil Rajapaksa #Election #Ranil wickremesinghe
PriyaRam
1 year ago
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? மஹிந்த பசிலுடன் கலந்துரையாடுவாரா ரணில்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

images/content-image/1706859083.jpg

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெறுவதற்கு, கட்சித் தலைமையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

“எதுவாக இருந்தாலும் நாங்கள் கலந்துரையாட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் கலந்துரையாடுமாறு நாங்கள் கேட்டோம். 

அதனை ஜனாதிபதியிடம் தெளிவாக சுட்டிக்காட்டினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!