ரணில் முன்வைக்கவுள்ள கொள்கை பிரகடன உரை!

#SriLanka #Parliament #Ranil wickremesinghe
PriyaRam
1 year ago
ரணில் முன்வைக்கவுள்ள கொள்கை பிரகடன உரை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை மீது இருநாள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் வைபரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

images/content-image/1706847509.png

அத்தோடு அன்றைய தினம் நாடாளுமன்றத்துக்குத் தலைமைதாங்கும் ஜனாதிபதியினால் காலை 10.30 மணிக்கு அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமும் முன்வைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் குறித்த விவாவாத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய குறித்த இரு தினங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை சபை ஒத்திவைப்புவேளை விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!