இன்றும் தொடரும் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
#SriLanka
#Hospital
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சுகாதார பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் (02.02) தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கலந்துரையாடலில் பணிப்புறக்கணிப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இடைக்கால மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முப்பத்தைந்தாயிரம் ரூபா டிஏடி கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி எழுபத்திரண்டு சுகாதார சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று வைத்தியசாலை நடவடிக்கைகளும் முடங்கின.
இதேவேளை சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



