பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு!
#SriLanka
#School
#Tamilnews
#sri lanka tamil news
#School Student
Thamilini
1 year ago
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இலங்கை பாடசாலைகளில் ஒன்றாம் தரம் முதல் 5ம் தரம் வரையிலான சகல சிறார்களுக்கும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆரம்ப தரத்தில் சுமார் 16 இலட்சம் சிறுவர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு பாடசாலை மதிய உணவு வழங்குவதற்காக 16 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், 2024ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் தவணை முடிவடைந்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கும் அதே பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் உடனடியாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.