ஸ்ரீலங்கன் விமான சேவை : முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீடிக்க நடவடிக்கை!

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை மீண்டும் ஒருமுறை நீடிக்க அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை தனியார்மயமாக்கல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முன்மொழிவுகளை அழைப்பதற்கான வரம்பு நீடிக்கப்படுவது இது மூன்றாவது தடவையாகும்.
முதலீட்டாளர்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மூன்றாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது,
இது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தனியார்மயமாக்கல் செயல்முறை மேலும் தாமதமாகும் என்பதைக் குறிக்கிறது. அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தில் ஒரு முக்கியமான படியாக, விமான நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கான முன்மொழிவுகளுக்கான அழைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி செய்யப்பட்டது.
மேலும் முன்மொழிவுகளுக்கான அழைப்புக்கான கடைசி திகதி கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆகும். எவ்வாறாயினும், போதிய ஈர்ப்பு இல்லாததால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கான முன்மொழிவுகளுக்கான அழைப்பை டிசம்பர் 18 ஆம் திகதி வரை நீட்டிக்கவும், பின்னர் இந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை நீட்டிக்கவும் அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு முடிவு செய்தது.
அதன்படி மூன்றாவது முறையாக இந்த ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரையின் கீழ், அரசுக்குச் சொந்தமான நஷ்டமடையும் நிறுவனங்களின் மறுசீரமைப்பின் கீழ் ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைத்தல்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடந்த காலங்களில் பல நிதி சிக்கல்களை எதிர்கொண்டதுடன், தற்போது அரசாங்க நிதியுதவியின்றி விமான சேவை இயங்கி வருகின்றது.



