இன்று முதல் நடைமுறையாகிறது இணையவழி பதுகாப்பு சட்டம்!
#SriLanka
#Parliament
#mahinda yappa abewardana
#speaker
PriyaRam
1 year ago

இணையவழி பாதுகாப்புச் சட்டம் இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுப் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இணையவழி பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் பொரும்பானைமை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்ட 34 திருத்தங்களை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் சான்று பத்திரத்தில் கையொப்பம் இடும் நடவடிக்கை சபாநாயகரால் பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இணையவழி பாதுகாப்பு சட்டம் இன்று சபாநாயகரால் சான்றுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.



