விடுதியில் தங்கியிருந்த நபர் மர்ம மரணம் - தீவிர விசாரணையில் பொலிஸார்!
#SriLanka
#Death
#Police
#Investigation
PriyaRam
1 year ago

ஹிக்கடுவ - வேவல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை குறித்த நபரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்காமையால், ஹிக்கடுவ பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து விடுதி நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பின்னர், பொலிஸாரும், விடுதி ஊழியர்களும் அந்த நபர் தங்கியிருந்த அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, குளியலறையில் இரத்தக் காயங்களுடன் நபர் இறந்து கிடந்தார்.
வறகொட, களனி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹிக்கடுவ பொலிஸார் மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



