தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு தொடர்பில் சுமந்திரன் விடுத்துள்ள வேண்டுகோள்!

#SriLanka #M. A. Sumanthiran #sritharan
PriyaRam
1 year ago
தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு தொடர்பில் சுமந்திரன் விடுத்துள்ள வேண்டுகோள்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை விரைவில் நடத்துமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பிரதி பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தேசிய மாநாட்டையொட்டி கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் இந்த கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/1706762357.jpg

அத்துடன், இலங்கை தமிழரசுக் கட்சி வரலாற்றில் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்ற அடிப்படையில், பதவியேற்வு விழா வைபவ ரீதியாக நடைபெற வேண்டியது கட்டாயமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காலம் தாழ்த்தாது பகிரங்க பொது நிகழ்வை நடத்துமாறு தமிழரசுக் கட்சியின் முன்னாள் பிரதி பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!