மலையகம் ஊடான ரயில் போக்குவரத்தை முன்னெடுக்க புதிய பரிந்துரை!

#SriLanka #Train #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மலையகம் ஊடான ரயில் போக்குவரத்தை முன்னெடுக்க புதிய பரிந்துரை!

மலையகம் ஊடான ரயில் போக்குவரத்தில் புகையிரதங்கள் தடம் புரள்வது அடிக்கடி இடம்பெறுவதால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரு பெட்டிகளை நீக்க உத்தரவு பிற்பிப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி 55  இருக்கைகள் கொண்ட புகையிரத கண்காணிப்புப் பெட்டிகளில்  2 பெட்டிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அகற்றுமாறு ரயில்வே திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார தெரிவித்தார்.  

மலையக ரயில் பாதைகளின் வளைவுகளின் கூர்மை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார். 

மலையக ரயில் பாதைகளில் 80% ரயில்கள் தடம் புரண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிய அவர்,  மலையக ரயில் பாதைகளில் இயக்குவதற்கு 45 இருக்கைகள் கொண்ட ரயில் கண்காணிப்பு பெட்டிகளை ஒதுக்க பரிந்துரைத்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!