கடந்த ஒரு மாதத்தில் இரண்டு இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்!

#SriLanka #Tourist #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கடந்த ஒரு மாதத்தில் இரண்டு  இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்!

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 201,687 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.  

அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்றும், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 210,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு  வருகை தந்துள்ளனர். 

இதேவேளை, கடந்த 16 மாதங்களில் 50,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாமரை கோபுரத்தை பார்வையிட வந்துள்ளதாக தாமரை கோபுர நிர்வாகப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். 50,000வது சுற்றுலாப்பயணியாக பல்கேரிய பெண் ஒருவர் நேற்று (31) இந்த கோபுரத்தை பார்வையிட்டதுடன், அவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!