ஐ.நா தலைமை அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை!

ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டின் நிறுவன நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக பிராந்திய தலைமை அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கொழும்பில் இந்த மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்திய தலைமைக் காரியாலயத்தின் அதிகாரிகள் குழுவொன்று அதன் நிறுவன செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைக்கு வந்துள்ளதுடன் அவர்கள் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
முழு நிறுவன நடவடிக்கைகளும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கை அலுவலகம் ஆகியவற்றால் வழிநடத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் 40 விவசாய அமைச்சர்கள் உட்பட ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 42 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 200 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.



