பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!

#SriLanka #Arrest #Police #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!

பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஹங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அன்றைய தினம் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலும் ஒரு சந்தேக நபரை மாத்தறையில் வைத்து கைது செய்தனர். 

நீர்கொழும்பு, அலவ்வா மற்றும் புஸ்ஸா ஆகிய பகுதிகளில் வசிக்கும் 28, 42 மற்றும் 58 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இந்த சந்தேக நபர்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்தியதற்காகவும், குற்றச் செயல்களின் போது பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதற்காகவும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், கொலைகளுக்காக துப்பாக்கிகளை கொண்டு சென்ற குற்றத்திற்காக முன்னதாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!