கருவலகஸ்வெவ பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!
#SriLanka
#Police
#GunShoot
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் நேற்று (30.01) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர் பவட்டமடுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பெண் ஒருவருடன் தகாத தொடர்பு வைத்திருந்ததாகவும், விசாரணையில் அந்த பெண்ணுடன் உறவில் ஈடுபட்ட மற்றொரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் தற்போது அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.