தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ள காற்றாலை திட்டம்!

#SriLanka #NorthernProvince #Mannar #government #Wind
PriyaRam
1 year ago
தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ள காற்றாலை திட்டம்!

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளை தனியார்துறைக்கு போட்டி அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

images/content-image/1706615588.jpg

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் 47 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 6 காற்றாலைகளை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு காரணமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!