ராமநாதபுரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ஏலக்காய் மீட்பு!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ஏலக்காய் மீட்கப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஏலக்காய் மண்டபம் மரைன் போலிசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் அவர்களை தேடி வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்துள்ள குந்துகால் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா , ஐஸ் போதைப்பொருள், சமையல் மஞ்சள், கடல் அட்டைகள் உள்ளிட்ட பல பொருட்கள் சமீப காலமாக பிடிபட்டு வருகிறது.
இதைதொடர்ந்து பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை பகுதியை மையப்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இந்திய கடலோர காவல்படை, உளவுத்துறை , மரைன் போலீஸ் என பல்வேறு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



