இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Rain #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் மழைபெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றராக உயர்ந்தால் கனமழை ஏற்படலாம் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!