செங்கடல் நெருக்கடியால் இலங்கை வரும் கப்பல்கள் : வருமானம் தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Colombo #Tamilnews #sri lanka tamil news #Ship #RedSea
Thamilini
2 years ago
செங்கடல் நெருக்கடியால் இலங்கை வரும் கப்பல்கள் : வருமானம் தொடர்பில் வெளியான தகவல்!

கடந்த வருடம் இலங்கையின் மொத்த ஏற்றுமதி 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. 

2023 டிசம்பர் மாதத்தில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 947.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.  

கப்பல் வருகை 35 வீதம் அதிகரித்துள்ளதாகவும்,  துறைமுகத்தின் கொள்கலன் நடவடிக்கைகளும் 72 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், செங்கடல் நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தின் வருமானம் அதிகரித்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்  தாரக பாலசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4