அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் தனது காதலனைப் பற்றி கூறிய உண்மை!

#SriLanka #Tamil #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #England #viduthalai #lanka4Media #lanka4_news #lanka4news
Dhushanthini K
3 months ago
அன்ரன் பாலசிங்கத்தின்  மனைவி அடேல் பாலசிங்கம் தனது காதலனைப் பற்றி கூறிய உண்மை!

அன்ரன் பாலசிங்கம் ஈழத் தமிழர் வரலாற்றில் மறக்கவும், நறுக்கவும் முடியாத ஒரு நபர் .எதிரியின் குகைக்குள் புலிகள் ஆயுதத்தோடு புகுந்து துவம்சம் செய்வார்கள். ஆனால் இவரோ ஏதோ ஒரு இடத்தில் இருந்து தனது சானக்கியத்தாலும், அறிவாலும், அனுபவத்தாலும், எதிரியை காலடியில் வீழ்த்தும் ஒரு மூளை பீரங்கி. இவர் பிரபாகரனுக்கு ஆலோசகர் மட்டும் அல்ல. ஒரு அன்பான அண்ணனாகவும். தமிழுக்கும் பிரபாகரனுக்காகவும் வாழ்ந்து பின் நோயினால் இறந்த தேசத் தமிழ் குரல் ஆவார். ஆம் விடையத்துக்கு வருவோம். இவருக்கு தமிழ்ப் பற்றை விட பிரபாகரன் மீது அதிக பற்று இருந்தது. இருந்ததாக பல இடங்களில் நிரூபனம் செய்திருக்கிறார். ஒரு ஆணின் வளர்ச்சிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது போல இவரின் செயற்பாடுகளுக்குப் பின்னாலும் ஒரு பெண் அதுவும் ஒரு அந்நிய மொழிக்கார பெண் இவரை மனதில் வைத்து தாலாட்டியதாக நாம் அறிந்தோம். அவர்தான் அடேல் பாலசிங்கம். அடேல் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட சுதந்திர வேட்கை என்னும் புத்தககத்தில் எழுதப்பட்டது என்பதைவிட பொறிக்கப்பட்ட சில வரிகளை நாம் இழை பிரித்துச் சுவாகிக்க விரும்புகின்றோம். முதன்முதலில் 1978ல் இலங்கை தீவைச் சேர்ந்த ஆன்டன் பாலசிங்கம் என்ற தமிழரை நான் திருமணம் செய்தபோது, ஒரு இனத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொண்டேன். தமிழர்களுடைய வீரம், தீரம், வாழ்க்கை முறை, கலாசாரம், உலகிலேயே தொன்மையான மரபு. இப்படி எண்ணற்ற விஷயங்களை அறிய எங்கள் காதல் காரணமாக இருந்தது. அப்போது எனக்கு 23 வயது. எனது அனுபவத்தில் நான் கண்டிராத பல புதிய அனுபவங்களை யாழ்ப்பாணத்தில் உணர்ந்தேன். தினம்தினம் குண்டுமழை பொழிய, போர் பதற்றம் நிறைந்த அந்தப் பகுதியில் நான் மட்டுமே அந்நிய தேசத்தைச் சேர்ந்தவளாக இருந்தேன். என்னுடைய வாழ்நாளில் தமிழர்கள் குறித்து நான் பெருமைப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. தமிழர்களின் சுதந்திரத்துக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியை நான் நேரில் உணர்ந்தவள் என்ற முறையில் சொல்கிறேன். முதல் காரணம் தங்களையே உரமாக்கி தமிழர்கள் விடுதலைக்காக இயக்கத்தை வளர்த்த தம்பிமார்களின் தியாகம். இதுதான் புலிகள் இயக்கத்தின் அடிநாதம். இரண்டாவது ஒரு விடுதலைப் போராட் டத்தில் அந்நிய நாட்டைச் சேர்ந்த என்னைத் தமிழர்கள் முழுமையாக நம்பினார்கள் மரியாதை செலுத்தினார்கள். எந்தச் சூழ்நிலையிலும் என்னை அவர்கள் அந்நியனாகக் கருதியது கிடையாது. எனக்கு ஒரு தமிழச்சி அங்கே தோழியாகக் கிடைத்தாள். அவள் என்னை 'வெள்ளைத் தமிழச்சி' என்றுதான் அன்போடு அழைப்பாள். நான் தமிழச்சி என்று அழைக்கப்பட்டது என் மூச்சு நின்று போகின்ற நிமிடம் வரையில் எனக்குப் பெருமைக்குரிய விஷயமாகும். அடேல் பாலசிங்கம்( அன்ரி) எழுதிய சுதந்திர வேட்கை என்னும் நூலில் இருந்து ....! தமிழச்சி. அடேல்பாலசிங்கம்.