உயர்தர பரீட்சை வினாத்தாள் வெளியான விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்ந்து விளக்குமறியல்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Examination
Thamilini
1 year ago
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் வெளியானது தொடர்பில் மொரட்டுவ மகா வித்தியாலயத்தின் பரீட்சை மண்டபத்தின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முதலில் கைது செய்யப்பட்ட பெண், மண்டபப் பணியாளர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர் பிலியந்தலை பிராந்திய கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் ஆலோசகராக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.