26 நாட்களில் 06 பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பு! இது யாருடைய தவறு?

#SriLanka #Accident #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Dhushanthini K
1 year ago
26 நாட்களில் 06 பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பு! இது யாருடைய தவறு?

பொதுவாக இலங்கையை பொறுத்தவரைக்கும் போக்குவரத்து விதி மீறல்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது. நமது அண்டை நாடான இந்தியாவுடன் ஒப்பிடும்போது கடுமையாக இருக்கிறது. 

இருந்தாலும் விபத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மோட்டார் சைக்களில் விபத்து, அதிகரித்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 

இதன்படி வருடம் துவங்கி ஒருசில நாட்களே ஆன நிலையில்,  இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

ஆனால், கடந்த ஆண்டு நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது பாதைகளில் வாகனங்களுக்கு இடையில் சரியான இடைவெளியை பேணாதது பல விபத்துக்களை ஏற்படுத்துவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.  

இதேவேளை, நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான வீதி விளக்குகள் செயலிழந்துள்ளமையினால், அப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளமையும் விபத்துக்கான மற்றுமொறு காரணம்  என்றும் கூறப்படுகிறது. 

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் இரகசியமான முறையில் மின்சார கம்பிகளை அறுத்து இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

ஹோமாகம - நியந்தகல அதிவேக மேம்பாலத்தில் நேற்று காலை 1,50,000 ரூபா பெறுமதியான உயர் அழுத்த மின் கம்பியின் ஒரு பகுதி அறுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதி சம்பவ இடத்திற்கு வந்தவுடன், கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த 3 பேர் தப்பியோடினர், சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் அவருடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் வழங்கிய வாக்குமூலத்தில் கொழும்பிற்கு சீக்கிரம் வந்துவிடலாம் என்று எண்ணி காரை செலுத்தியதாக கூறியுள்ளார். ஆக அதிக வேகம் விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகின்றனர். 

அதேபோல் சாரதிகளுக்கு இடையில் நிலவும் கடுமையான போட்டிகளாலும் விபத்து நேர்வதை காணக்கூடியதாக உள்ளது. அண்மையில் வவுனியா சென்ற பேருந்து ஒன்றில் சாரதி தொலைப்பேசியை பார்த்துக்கொண்டு வாகனம் செலுத்தும் காணொலி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இவ்வாறாக சாரதிகளின் கவனயீனமும் விபத்துகளுக்கு முக்கிய பங்கு வகிப்பதை அவதானியக்கக்கூடியதாக இருக்கிறது.  அதுமாத்திரம் அன்றி சிலர் மதுபானங்களை அருந்திவிட்டு வாகனங்களை செலுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். 

இதேவேளை சாரதிகள் விதிமுறைகளை கடைப்பிடிக்காததே நெடுஞ்சாலைகளில் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

நெடுஞ்சாலையில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையிலான நெடுஞ்சாலைப் பகுதியில் மின் விளக்குகளை பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார்.

ஆகவே சாரதிகளும் சரி, பயணிகளும் சரி தங்களுடைய பொறுப்புக்களை உணர்ந்து செயற்படும்போது இவ்வாறான தேவையற்ற விபத்துக்களை தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.

Lanka4 வின் பிரத்தியேக செய்தி.....! 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!