பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம் - ஆரம்பமாகவுள்ளது வாக்காளர் பதிவு நடவடிக்கை!

#SriLanka #Election #Lanka4 #Election Commission #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம் - ஆரம்பமாகவுள்ளது வாக்காளர் பதிவு நடவடிக்கை!

வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படுவதுடன் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி 1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு சட்டத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.

images/content-image/1706242697.jpg

வாக்காளர் பெயர் பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதமளவில் நிறைவடையும் அதனை தொடர்ந்து வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு நான்கு அல்லது ஐந்து வாரகாலத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.

மேலும் 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது ஆனால் நிதி விடுவிப்பு தாமதமானதால் தேர்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!