இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் மரணம்!
#SriLanka
#Death
#Lanka4
Soruban
1 year ago
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சற்றுமுன் அவர் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பவதாரணிக்கு தற்போது 47 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதேவேளை இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் நேற்றையதினம் இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.