மைத்திரிக்கு இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க வாளை பரிசளித்த புட்டின்!
#SriLanka
#Maithripala Sirisena
#Lanka4
#Putin
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி புடின் தனக்கு ரத்தினக் கற்கள் பதித்த தங்க வாளை பரிசாக வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக இருந்த வேளை ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் குறித்த வாள் பரிசாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றப் போராடிய இந்நாட்டு ராணுவ வீரருக்கு சொந்தமான அந்த வாள் இங்கிலாந்தில் ஏலத்தில் கண்டெடுக்கப்பட்டது எனவும், அது தற்போது கொழும்பு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது மூத்த மகளின் வீட்டில் தங்கக் குதிரை இருந்ததாக வெளியான செய்தி பொய்யானது என்றும், அந்த வீட்டில் இருந்த சில உணவுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



