இலங்கையில் தொடர்ச்சியாக குறிவைக்கப்படும் பௌத்த தேரர்கள்!
#SriLanka
#Buddha
#Lanka4
#GunShoot
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

தொடங்கஸ்லந்த, உடதபொலவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பௌத்த ஆலயத்தை இலக்கு வைத்து நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயத்தின் பிரதமகுருவான வண. கல்நேவே பன்னகித்தி தேரர் அங்கு வசித்து வரும் நிலையில், பிக்கு துப்பாக்கிச் சூட்டில் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முதல் நாள் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளைப் போல் பாவனை செய்து இனந்தெரியாத நான்கு நபர்களால் 45 வயதான பௌத்த பிக்கு வண. கலாபலுவாவே தம்மரதன தேரர் சுடப்பட்டிருந்தார்.
பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கம்பஹா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சில மணி நேரங்களின் பின்னர் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு நாளின் பின்னர் மற்றுமொரு பௌத்த பிக்குவும் குறிவைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



