இலங்கை தாய்லாந்து இடையே ஒப்பந்தம் - அனுமதி வழங்கியது அமைச்சரவை!
#SriLanka
#Lanka4
#Thailand
#Agreement
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்திருந்த நிலையில், அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில் இதுவரை 9 சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.



