நாவலப்பிட்டியில் தாயை அடித்துக்கொன்ற மகன் கைது!
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
67 வயதுடைய தாயை இருபத்தி இரண்டு விலா எலும்புகள் முறியும் வரை அடித்துக் கொன்ற 41 வயது மகனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாவலப்பிட்டி பொஹில் மேல் பகுதியில் வசித்து வந்த எஸ். ஜொலிமா என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளைய மகன் குறித்த தாயின் தலைப்பகுதியில் தாக்கியதாகவும், இதனால் தாயின் விலா எலும்புகள் உடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாகவே மரணம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் தனது தந்தையை தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தியிருந்ததாகவும், எனவே தந்தை தற்போது தனது மூத்த மகளின் வீட்டிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.