இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியை குறித்த அறிவிப்பு!

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.
இறுதிக் கிரியைகளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்று (25.01) காலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு கார் வீதியின் பாதுகாப்பு வேலியிலும், அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியிலும் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த சனத் நிஷாந்த, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், ஜீப்பின் சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திரு. சனத் நிஷாந்த இறக்கும் போது அவருக்கு வயது 48 வயது. மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று காலை ராகம வைத்தியசாலையில் இடம்பெற்றதாக அறியமுடிகிறது.



