யாழில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பமானது போராட்டம்!
#SriLanka
#Jaffna
#Protest
#Buddha
#Lanka4
#Thaiyiddi
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
காங்கேசன்துறை தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி ஒவ்வொரு போயா தினமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் காணி உரிமையாளர்களாலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் காணி உரிமையாளர்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



