ஊடக அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்திற்கு அறை கூவல்!
#SriLanka
#Jaffna
#Protest
#Lanka4
#Media
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று மாலை 4 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் அணிதிரளுமாறு யாழ். ஊடக அமையம் கோரியுள்ளது.



