கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்க இதை மட்டும் செய்யுங்கள் போதும். எளிய முறை.

#spiritual #husband #ஆன்மீகம் #wife #கணவன் #மனைவி #குடும்பம் #லங்கா4 #family #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mugunthan Mugunthan
3 months ago
கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்க இதை மட்டும் செய்யுங்கள் போதும். எளிய முறை.

குடும்பம் என்றால் அங்கு கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இருப்பார்கள். அவ்வாறான குடும்பத்தில் வரும் சண்டை, மனத்தாபங்கள் எல்லாம் வீணாக வருபவவை. அவை பெரிதாக நமக்கு தெரிவதில்லை.

 ஆனால் ஒரு சில குடும்பங்களில் மட்டும் எப்போதும் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டே இருக்கும் ஒருவர் எதை பேசினாலும் அது மிகப்பெரிய சண்டையில் சென்று தான் முடியும் அதுவும் குறிப்பாக கணவன் மனைவி  இடையே இவ்வாறு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கும். ஆன்மீக ரீதியாக நாம் இதனை தீர்க்க வேண்டுமானல் பின்வருவதை செய்து தீர்க்கலாம்.

 இப்படி எப்பொழுதுமே உங்கள் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் சண்டே வந்து கொண்டே இருக்கிறது தொட்டதுக்கெல்லாம் பிரச்சனையை தான் வருகிறது என்றால் அதற்கு உங்களின் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்காமல் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். 

அதனால்தான் எப்போதும் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டையும் தர்ப்பணத்தையும் தவறாமல் செய்ய வேண்டும் நாம் சரியான முறையில் செய்யாமல் தவறும் பட்சத்தில் இது போன்ற குடும்பத்தில் பல பிரச்சனைகள் நடந்து கொண்டே தான் இருக்கும்.

images/content-image/1706103439.jpg

இப்படி நம் முன்னோர்களுக்கு சரியான முறையில் நம் கடமைகளை நிறைவேற்றாமல் இருந்து வந்திருந்தால் கணவனின் முன்னோர்களாளோ அல்லது மனைவியி.ன் முன்னோர்களாளோ ஏற்படலாம். இந்த பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறிய பரிகாரம் செய்ய வேண்டும் இந்த பரிகாரத்தை நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். 

இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு வெள்ளை நிற தாளை எடுத்துக்கொண்டு அதில் உங்கள் வீட்டில் வாழ்ந்து மறைந்த உங்கள் முன்னோர்களின் பெயர்களை எழுதிக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு வெள்ளை துணியில், நான்கு வெற்றிலை, இரண்டு கொட்டை பாக்கு, ஒரு கைப்பிடி பச்சரிசி சிறிது மஞ்சள் கலந்தது, ஒரு ரூபாய் நாணயம் இரண்டு விரலி மஞ்சள், இவை எல்லாம் வைத்த பிறகு நீங்கள் எழுதி வைத்து அந்த வெள்ளைத் தாளையும் சேர்த்து வெள்ளை துணியை ஒரு முடிச்சாக முடிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு முடிச்சு நீங்கள் தயார் செய்ததும் வெள்ளிக்கிழமை நீங்கள் வீட்டில் எப்போதும் போல் பூஜை செய்தீர்கள் அல்லவா அதே போல் பூஜை செய்து உங்கள் குலதெய்வத்தையும் உங்கள் முன்னோர்களையும் மனதார நினைத்து உங்கள் குடும்பத்தில் அடிக்கடி நடந்து கொண்டிருக்கும் சண்டை, சச்சரவுகள் தீர வேண்டும் என்று அவர்களிடம் மனம் உருகி வேண்டி கொள்ளுங்கள். 

images/content-image/1706103652.jpg

அதன் பிறகு நீங்கள் வைத்திருக்கும் முடிச்சுக்கு நம் கற்பூரத்தை ஆராதனை, தீப ஆராதனை, சாம்பிராணி தூபம் எல்லாம் போட்டு உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் வெள்ளிக்கிழமை செய்யும் பூஜையோடு குலதெய்வத்தையும் மனதார வேண்டிக் கொண்டு, உங்கள் முன்னோர்களையும் மனதில் நினைத்து உங்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று அவர்களிடம் வேண்டிக் கொள்ளுங்கள். 

அதன் பிறகு இந்த முடிச்சுக்கு கற்பூர தீபாராதனை காட்டி வழிபட்டு உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். எப்போதெல்லாம் வழிபாட்டில் ஈடுபடுகிறீர்களோ அப்போதெல்லாம் முன்னோர்கள் வேண்டி தொடர்ந்து இதனை செய்து வந்தால் உங்கள் வீட்டில் குடும்பத்தில் கணவன் மனைவின் தொடர் வினைகள் நீங்க வாய்ப்புண்டு.