கொழும்பு மேலதிக நீவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள “விஸ்வ புத்தர்”!

#SriLanka #Arrest #Lanka4 #Court #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
கொழும்பு மேலதிக நீவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள “விஸ்வ புத்தர்”!

“விஸ்வ புத்தர்” என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட துறவியை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை வழங்கினார்.

சந்தேக நபரை எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/1706081143.jpg

சந்தேக நபரான துறவி கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரை இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!