TIN இலக்கம் பெற்றுக்கொள்ளும் நடைமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #government #taxes #Lanka4 #money
Mayoorikka
1 year ago
TIN இலக்கம் பெற்றுக்கொள்ளும் நடைமுறை தொடர்பில்   வெளியான அறிவிப்பு!

ஒருவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக (TIN) மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

 TIN இலக்கம் பெற்றுக்கொள்ளும் பொதுவான முறை வழமை போன்று இடம்பெறும் நிலையில், பொது மக்களுக்கு மிக எளிதாக இதனை வழங்குவது தொடர்பில் நேற்று (23) இடம்பெற்ற ஜனாதிபதியின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 15 மில்லியன் பேரின் சுய விபர தகவல் அமைப்பைப் பயன்படுத்தி இந்த செயல்முறை மேற்கொள்ளப்படும் என்று கூறிய இராஜாங்க அமைச்சர், இதன் மூலம் நாட்டில் அரச வருமானம் குறித்த தெளிவான தரவு அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!