பிறந்து 13 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு: மட்டக்களப்பில் சோகம்

#SriLanka #Batticaloa #Death #Police #Hospital #Lanka4 #baby #Baby_Born
Mayoorikka
1 year ago
பிறந்து 13 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு: மட்டக்களப்பில் சோகம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் பால் புரைக்கேறி 13 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 குழந்தை பிறந்து 13 நாட்களாகிய நிலையில் குழந்தைக்கு மாலை வேளையில், தாயார் பால் கொடுத்த போது குழந்தைக்கு பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.

 இதனையடுத்து குழந்தையின் தாயாரிடம் மேற்கொண்ட விசாணையின் போது, அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், குழந்தையின் சடலத்தை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.

 இந்த நிலையில் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!