கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#India
#SriLanka
#Sri Lanka President
#Festival
#Lanka4
#kachchaitheevu
Mayoorikka
1 year ago
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
வருடாந்த திருவிழாவிற்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் யாழ். இந்திய துணை தூதரக அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ். மறைமாவட்ட குரு முதல்வர், கடற்படையினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த கூட்டத்தின்போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.