சமூக ஊடகங்கள் மாத்திரம் இல்லையென்றால் நாரமல்ல துப்பாக்கிச்சூடு சம்பவம் மாற்றியமைக்கப்பட்டிருக்கும் - அநுர!

மக்களுக்கு உண்மையைக் கொண்டுச் சேர்ப்பதில், சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மாத்திரம் இல்லை என்றால், நாரம்மல துப்பாக்கிச் சூடு சம்பவம் சம்பந்தப்பட்ட முழு சம்பவத்தையும் காவல்துறை மாற்றியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான ஊடக அறிக்கைகள் ஊடக உரிமையாளர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட செய்திகளை தெரிவித்துள்ளதாகவும், சமூக ஊடகங்கள் உண்மை மற்றும் வடிகட்டப்படாத செய்திகளை மக்களுக்கு பரப்புவதாகவும் அவர் கூறினார்.
ஆன்லைன் பாதுகாப்பு மசோதா குறித்து கருத்து தெரிவித்த அவர், சமூக ஊடகங்களில் உண்மைச் செய்திகளைப் பரப்புவது அவர்களுக்கு தலைவலியாக இருந்ததால் அவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சதி செய்வதாக தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் அரசியல்வாதிகள் பற்றிய உண்மைச் செய்திகளை சுமந்து வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அண்மைக்கால அகழ்வாராய்ச்சிச் சுற்றுப்பயணத்தை சமூக ஊடகங்கள் காரணமாகவே மக்கள் அறிய முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



