ஓட்டுக்குழுக்களுடன் சேர்வது பற்றி ஜோசப் பரராசசிங்கம் கூறிய தீர்க்க தரிசனம்

#SriLanka #government #Tamil #parties #Sridaran_MP #lanka4Media #lanka4.com #Lanka4_sri_lanka_news
Prasu
1 year ago
ஓட்டுக்குழுக்களுடன் சேர்வது பற்றி ஜோசப் பரராசசிங்கம் கூறிய தீர்க்க தரிசனம்

தமிழரசுக்கட்சி இனி ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து இயங்குவதில்லை என சிறிதரன் உட்பட மத்திய குழுவின் உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்தே ஒட்டுக்குழுக்களை தள்ளி வைத்தனர்..

தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிறிதரன் தம்முடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட ஒட்டுக்குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஓட்டுக்குழுக்களுடன் சேர்வது எவ்வளவு ஆபத்து என்றும் அது தமிழரசுக்கட்சிக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதை சிறிதரன் அறியாதவர் அல்ல.

ஓட்டுக்குழுக்களை இணைத்துக்கொள்வது எவ்வளவு ஆபத்தானது என மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் சொன்ன தீர்க்க தரிசனம் ஞாபகத்திற்கு வருகிறது. தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மேற்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் நானும் இன்னுமொரு ஊடகவியலாளரும் யோசப் பரராசசிங்கத்தை சந்தித்து பேசினோம்.

அப்போது தமது கட்சிக்கு கிடைத்த கசப்பான சம்பவம் ஒன்றைப்பற்றி சொன்னார். 1989ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இந்தியாவின் வற்புறுத்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி உதய சூரியன் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈ.என்.டி.எல்.எவ் போன்ற ஆயுதக்குழுக்களுடன் சேர்ந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டது.

ஆத்தேர்தலில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் ஆயுக்குழுக்கள் கள்ள வாக்கு போட்டு மோசடி செய்தன. ஆத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு வடக்கு கிழக்கில் 9 ஆசனங்கள் கிடைத்தன. 

ஆந்த 9பேரும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய ஆயுக்குழுக்கள் நிறுத்திய வேட்பாளர்கள் ஆகும். தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. முழுக்க முழுக்க கள்ள வாக்கின் மூலம் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்களை படுகொலை செய்த ரேலோ ஈபி போன்ற ஆயுக்குழுக்கள் வெற்றி பெற்றன.

இந்த கசப்பான படிப்பினைக்கு பின் ஆயுக்குழுக்களுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்ததாக யோசப் பரராசசிங்கம் கூறினார்.

ஆயுக்குழுக்களுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் அந்த ஆயுதக்குழுக்கள் தங்களை வளர்த்துக்கொள்வார்கள். எமது கட்சி தேய்ந்து போகும் என்றும் சொன்னார். ஆயுக்குழுக்களுடன் சேர்ந்து தேர்தலில் நிற்பதற்கு எனக்கு விரும்பம் இல்லை, ஆனால் கட்சி தலைமை முடிவெடுத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என அவர் சொன்னார்.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை மண்டபத்தில் நடந்த சந்திப்பிலும் ஆயுதக்குழுக்களுடன் சேர்வதற்கு யோசப் எதிர்ப்பு தெரிவித்தார். மாவை சேனாதிராசாவே ஆயுக்குழுக்களுடன் சேர்வதற்கு சம்மதம் தெரிவித்தார்.

2001ல் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையிலும் 2004க்கு பின்னர் தமிழரசுக்கட்சி தலைமையிலும் ரெலோ ஈ.பி, புளொட் போன்ற ஆயுக்குழுக்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றன.

இதனால் தமிழரசுக்கட்சி தேய்ந்து போக ஒட்டுக்குழுக்கள் தங்களை வளர்த்துக்கொண்டன. யோசப் பரராசசிங்கம் சொன்ன தீர்க்க தரிசனம் நிசமாகியது. இந்த படிப்பினையை வைத்து தமிழரசுக்கட்சி மத்திய குழு தீர்மானம் எடுத்து இநத ஆயுதக்குழுக்களை விலக்கி வைத்தது.

ஓட்டுக்குழுக்களை விலக்கி வைப்பதென்ற தீர்மானத்திற்கு அப்போது சிறிதரனும் பூரண ஆதரவை தெரிவித்திருந்தார். ஓட்டுக்குழுக்களை சிறிதரன் சேர்ப்பாராக இருந்தால் தன்னுடைய தலையில் தான் நெருப்பு வைப்பதற்கு சமனாகும்.

 தமிழரசுக்கட்சி சவப்பெட்டிக்குள் போவதை யாராலும் தடுக்க முடியாது. இத் தற்கொலை முயற்சியில் சிறிதரன் ஈடுபட மாட்டார் என நம்புவோம். வீட்டு வாசலில் இரத்த வெறி பிடித்த நாய்கள் வால் ஆடடிக்கொண்டு நிற்பதற்காக அந்த நாய்களை வீட்டு மெத்தையில் கொண்டு போய் படுக்க வைக்க முடியுமா?

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!