ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் : வடிவேல் சுரேஷ் வலியுறுத்தல்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Dhushanthini K
1 year ago
ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் : வடிவேல் சுரேஷ் வலியுறுத்தல்!

ஆசிரிய உதவியாளர்களுக்குரிய நிரந்தர நியமனம் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.  

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தொடர்ந்தும் ஆசிரியர் உதவியாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல வருட காலமாக உதவி ஆசிரியர்களாக பணிபுரிந்தும் கூட அவர்களை நிரந்தர சேவையில் இணைக்காமல் இருப்பதினாலும் அவர்களுக்குரிய முறையான கொடுப்பனவு வழங்கப்படாமையினாலும் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.  

அரசாங்கமும் கல்வி அமைச்சும் ஒன்றிணைந்து உடனடியாக இதற்கு தீர்வு வழங்க வேண்டும். மலையகத்தைப் பொறுத்தவரை ஆசிரியர் வெற்றிடங்கள் பரவலாக காணப்படுகின்றது. அரசாங்கத்தின் ஊடாக 3,000 உதவி ஆசிரியர்களை வெற்றிடங்களுக்கு நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அது வரவேற்கத்தக்க விடயமாக இருந்த போதிலும் தற்சமயம் உதவி ஆசிரியர்களாக சேவை புரிபவர்களின் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து வைத்த பின்னரே புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!