எதிர்காலத்தில் பணவீக்கத்தின் நிலை அதிகரிக்கும் அபாயம் : மத்திய வங்கி ஆளுநர்!
#SriLanka
#Bank
#Lanka4
#economy
#Tamilnews
#sri lanka tamil news
#lanka4Media
Dhushanthini K
1 year ago

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள பெறுமதி சேர் வரி மற்றும் மோசமான காலநிலை காரணமாக ஜனவரி மாதத்தில் பணவீக்கம் சுமார் 7% ஆக உயரக்கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று (23.01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "எதிர்காலத்தில், எங்களின் பணவீக்க இலக்கு 5% ஆகும். சராசரி மதிப்பை 4% - 6% வரை பராமரிக்கலாம் என நாங்கள் நம்புகிறோம்.
எனவே, இந்த நேரத்தில், சந்தை வட்டி விகிதங்களை ஏதாவது ஒரு வழியில் சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் வட்டி விகிதம் நிலையானதாக உள்ளது. எதிர்காலத்தில், அதுவரை பாலிசி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.



