தமிழரசு கட்சியின் தலைவர் சிறீதரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு!

#SriLanka #Tamil People #Lanka4 #sritharan #lanka4Media #lanka4news #lanka4.com
PriyaRam
1 year ago
தமிழரசு கட்சியின் தலைவர் சிறீதரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு!

கொள்கை ரீதியாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறு தமிழரசு கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றதும் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் மக்கள் நலனை கருத்திற் கொண்டு தமிழ் தேசியத்தின் பாதையில் ஓரணியாக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/1706009914.jpg

தமிழ் தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிட்டு, தற்போது தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழரசு கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் புத்துயிரூட்டுவதே தனது நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டை துரித கதியில் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!