சபாநாயகரால் பாராளுமன்றத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்கள்!

#SriLanka #Parliament #Lanka4 #speaker
Mayoorikka
1 year ago
சபாநாயகரால் பாராளுமன்றத்திற்கு  விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்கள்!

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக 6 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்துள்ளார்.

 அத்துடன் நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டமூலத்துக்கு எதிராக 2 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற அமர்வின் போது சபாநாயகர் மேற்கண்டவாறு அறிவித்தார். அவர் மேலும் அறிவித்ததாவது,

 அரசியலமைப்பின் 121 (1) சரத்துக்கு அமைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஆறு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அதன் பிரதிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

 அதேபோல் நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டமூலத்துக்கு எதிராக அரசியலமைப்பின் 121 (1) சரத்துக்கு அமைய உயர்நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு அதன் பிரதிகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!