இந்தியாவை மிரட்டிய பிறேமதாச நடந்தது என்ன?

இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அமைதியை ஏற்படுத்தவும் புலிகளை ஒடுக்கவும் 1987ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இதையடுத்து அங்கு அமைதி காக்கும் பணியில் ஈடுபட இந்திய ராணுவத்தினர் சென்றனர். ஆனால், அப்போது பிரதமராக இருந்த பிரேமதாசாவுக்கு அந்த ஒப்பந்தத்தில் விருப்பமில்லை.
பின்னர் 1988ம் ஆண்டு பிரேமதாசா அதிபராக பொறுப்பேற்றவுடன், இந்திய ராணுவத்தினரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதே தனது முதல் பணியாகக் கருதினார்.
1989ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் ரகசிய பேச்சு நடத்திய அவர், அதே ஆண்டு ஜூலைக்குள் இந்திய ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என பகிரங்கமாக அறிவித்தார்.
அவ்வாறு வெளிறாமல் இலங்கையில் இங்கு இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து இருந்தால், அது எனது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும். இனி நீங்கள் வரும்போது எனது இறுதிச் சடங்கைத்தான் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மிரட்டினார்.



