சமன் பெரேராவின் படுகொலை - மௌனம் காக்கும் அத்துரலிய ரத்ன தேரர்!

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவின் படுகொலை தொடர்பில் கருத்து வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வதாக அக்கட்சியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துரலியே ரத்ன தேரருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவுக்கு நீதவான் எதிர்வரும் ஜூன் 4ம் திகதியன்று அழைப்பாணை விடுத்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் நேற்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் சமன் பெரேரா இறந்தார் என்ற உண்மை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை. இதன்படி சந்தேகநபருக்கு அழைப்பாணை அனுப்ப நீதவான் தீர்மானித்தார்.
சந்தேகநபரான சமன் பெரேராவுக்கு எதிரான இந்த வழக்கை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளனர்.



